வயதான பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்து கொண்டு அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த சகா என்பவருக்கு 51 வயது ஆகின்றது. இந்த பெண்ணிற்கு சொந்தமான 10 ஏக்கர் நிலமும், வயதான தாயுடன் வசித்து வருகிறார். வருமானத்திற்காக சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொண்டால் தாயை பராமரிக்க முடியாமல் சென்று விடும் என்பதற்காக 51 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார். […]
