இந்திய சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான டாப்ஸி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக தெலுங்கில் டாப்ஸி நடித்துள்ள மிஷன் இம்பாஸிபிள் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து பாலிவுட்டில் லூப் லப்பேட்டா, தோபாரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்ஸி, ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக ஹிந்தியில் தயாராகும் பிளர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். மேலும் தமிழில் ஜன கண மன மற்றும் […]
