தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க .ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மழைப்பொழிவை தரும். மழைக்காலத்தில் புயல் பாதிப்புகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். வர்தா, கஜா, நீலம், புரவி, நிவர் போன்ற புயல்கள் தமிழகத்தையே புரட்டிப் போட்டன. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் […]
