புதிதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஒ மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் செயல்பட்டு வந்த தாலுகா அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கட்டிடம் ஆகும். எனவே புதிய தாலுகா அலுவலகம் கட்ட கடந்த ஆண்டு இடம் தேர்வு செயப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் இயங்க மாவட்ட ஆட்சியர் முரளிதரன் […]
