நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோக்குடல் கிராமத்தில் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, இரவு நேரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த அளவு நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம். இதனால் சமுதாயக்கூடம் வீடுகள் உட்பட 10 கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டது என கூறியுள்ளனர். […]
