திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் பைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த பிளாஸ்டிக் டம்ளர்களும், பாலித்தீன் பைகளும் வெளியூர்களில் இருந்து கடத்தி வரப்படுவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லாரி மூலம் மதுரையிலிருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாநகர நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல்லில் இருக்கும் லாரி புக்கிங் பார்சல் அலுவலகங்களை கண்காணித்தனர். […]
