ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலக்கரையில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் 35 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 21-ஆம் தேதி பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மாணவனை பெற்றோர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் பள்ளியில் கழிப்பறையை சுத்தம் செய்த போது கொசு கடித்ததாக மாணவன் டாக்டரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த கல்வி […]
