அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தில் துணைப் பதிவாளராக ஸ்ரீராம் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இங்கு பணி மாறுதலாகி வந்துள்ளார். கொரோனோ தொற்று காரணமாக கடந்த ஒரு வருடமாக பத்திரப்பதிவு குறைந்த அளவில் நடைபெறுகிறது. அதனால் இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு சமீப காலமாக அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு […]
