நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இணைந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாபுதுக்குடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிக்கு கோவில்பட்டிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாகவே இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மனுவிற்கு அதிகாரிகள் […]
