கோயம்புத்தூர் மாநகராட்சி உதவி நகரமைப்பு அதிகாரி விமலா தலைமையில் அதிகாரிகள் கணபதி மணியக்காரம்பாளையம் பகுதியில் சீனிவாசா நகர் செல்லும் சாலையில் நேற்று காலை 10 மணிக்கு குடிநீர் குழாய் பதிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கிருக்கும் புதிய குடியிருப்பு வழியாக குடிநீர் குழாய்களை கொண்டு செல்ல முயன்ற போது குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் குடியிருப்புக்கு செல்லும் இரும்பு கதவை அடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை […]
