கஞ்சா கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்களை டி.ஐ.ஜி பாராட்டியுள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. எனவே இதை தடுப்பதற்காக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனிப்படை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாகை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் […]
