தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பொதுவாக மழைக் காலங்கள் என்றாலே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை தொடங்கியது. சில இடங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிவு பெற்றாலும் பல இடங்களில் பணிகள் பாதியிலேயே முடங்கி இருக்கிறது. அதன் பிறகு சில இடங்களில் இப்போதுதான் குழி தோண்டி பணிகளை தொடங்கியுள்ளனர். […]
