அரசு உத்தரவை மீறி விற்பனை செய்துகொண்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்ததோடு மட்டுமில்லாமல் மூன்று கடைகளுக்கு ரூபாய் 15 அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. . […]
