பொதுச் செயலாளருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளருமான அம்மா ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.கவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக இரட்டை தலைமை கொண்டுவரப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை நிர்வகித்து வந்தனர். ஆனால் அ.தி.மு.கவில் திடீரென ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்ததால், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் எதிர் எதிர் துருவங்களாக மாறி […]
