சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 468 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கடந்த ஆண்டு கொரோனா என்ற கொடிய நோய் பரவியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓர் ஆண்டில் 33 ஆயிரத்து 85 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சோதனை மூலம் உறுதி செய்துள்ளனர். இதில் 32 ஆயிரத்து 410 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என […]
