ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிவதோடு, வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் கடுமையான பனிமூட்டத்துடன் குளிர் நிலவுகிறது. இதனால் காலை நேரங்களில் வெளியே வரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதனையடுத்து வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்குகின்றனர். […]
