விஷம் குடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அதம்பாவூர் மேல தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அன்பழகன் சமீபகாலமாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த 20-ஆம் தேதி அன்பழகன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அன்பழகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் அன்பழகன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு […]
