அண்ணா மாணியின் பிறந்த நாளை கூகுல் கொண்டாடுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் பகுதியில் கடந்த 1918-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் அண்ணா மாணி பிறந்தார். இவர் ஒரு சிறந்த இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ஓசோன் அளவீடுகள், காற்றின் ஆற்றல், சூரியன் போன்றவற்றில் ஆய்வுகள் நடத்தி எண்ணற்ற அளவீடுகளை வெளியிட்டுள்ளார். […]
