அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம், 10 ஆண்டுகளுக்கு பின் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழக அரசின் உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் 10 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, செயலர் கார்த்திகேயன் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த துணைவேந்தர் வேல்ராஜூக்கு உத்தரவிட்டிருந்தனர். குழப்பமான வடிவம் […]
