தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி மிக சிறப்பாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் செவபுரம் தொகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 108 பானைகள் வைத்து பொங்கல் விடப்பட்டது. இதற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் பெருமைகளை பறைசாற்றும் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது […]
