பாஜக முன்னாள் தலைவர் ஹெச்.ராஜா பத்திரிகையாளர்கள் முன்னிலையிலே ஊடகங்களை இழிவாகப் பேசி உள்ளார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களை சமாதானப்படுத்தும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “பாரதிய ஜனதா கட்சி அனைத்தும் ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூணாக உள்ள செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்தின் மீது பெரிய மரியாதையை வைத்துள்ளது. பத்திரிகையாளர்களின் பங்கானது தமிழக பாரதிய ஜனதா […]
