முதலமைச்சர் குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதன் பேரில் கடந்த 11ஆம் தேதி வட சென்னையில் பல இடங்களில் முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது அம்பலமாகியுள்ளது.சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்த விசாரணை செய்ததில் பலருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில்,முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு பாஜக அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதும், […]
