முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதன் பின்னணியில் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டவர் உள்ளதாக ஐகோர்ட்டில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி வட சென்னையின் பல்வேறு பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக துறைமுகம் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் அளித்த புகார் அடிப்படையில், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி மண்ணடியை சேர்ந்த ரமேஷ், […]
