அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இந்த பணி நீக்கத்தை கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 206 பணியாளர்களும் மற்றும் தினக்கூலி அடிப்படையில் 140 பணியாளர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதம் ரூ.3500 முதல் ரூ.7000 வரை மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை […]
