சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் தம்பி என்றும் பாராமல் அரிவாளால் தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள வீரகனூர் பகுதியில் பாஸ்கர்(41) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனது தம்பி வெள்ளையசாமியின் திருமணத்தின்போது 4 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பணத்தை பாஸ்கர் திருப்பி தருமாறு கூறி வந்தார். இதற்கிடையே வெள்ளையசாமி குடும்பத்தின் பூர்விக நிலமான 50 சென்ட் விவசாய நிலத்தை பாஸ்கருக்கு தெரியாமல் விற்க முயன்றுள்ளார். […]
