அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள முத்தாம்பட்டி பகுதியில் மணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகேசன், வெங்கடேசன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சிவகேசனுக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி சத்யா இறந்து விட்டார். இதனையடுத்து பாண்டியம்மா, ராதா ஆகியோரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் முதல் மனைவி சத்யாவிற்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். […]
