அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழக்கோட்டை பகுதியில் தங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தில் அவரது சகோதரர் காளிராஜன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 45 நாட்களாக தங்கம் காளிராஜனுக்கு சம்பளம் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் சிந்தலக்கரை பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கம் வேலை பார்த்து கொண்டிருந்தார். அங்கு சென்ற காளிராஜன் தங்கத்திடம் சம்பளம் கேட்டுள்ளார். அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]
