ஜெர்மனியில் அணை ஒன்றில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பதற்றமாக உள்ளனர். பல்வேறு நாடுகளும் ஐரோப்பாவில் கொட்டி தீர்த்த கனமழையால் பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதோடு நிலச்சரிவாலும், வெள்ளத்தாலும் ஜெர்மனி பெரும் அபாயத்தை சந்தித்துள்ளது. மேலும் ஜெர்மனியில் மட்டும் 106 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் Bonn நகரத்துக்கு அருகாமையில் உள்ள Euskirchen பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணை ஒன்றில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விரிசல்கள் […]
