தென்பெண்ணை அணை உடைப்பு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூபாய் 25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையில் கடந்த 23-ம் தேதியன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் […]
