தென் பெண்ணை ஆற்று நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,400 கன அடியாக இருந்தது. இதன் காரணமாக அணையிலிருந்து வினாடிக்கு 10,800 கன அடி தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து பிற்பகலில் நீர் வரத்து மேலும் அதிகரிக்க துவங்கியது. அந்த வகையில் மதியம் 1 மணி நிலவரப்படி அணைக்கு நீர் […]
