அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக மூன்று நாடுகள் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்கா அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. இதனை தொடர்ந்து ஈரான் மீது படிப்படியாக பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இதனையடுத்து ஈரானும் தன் பங்களிப்பாக படிப்படியாகவும் வெளிப்படையாகவும் அணுசக்தி வரம்புகளை கைவிட்டுவிட்டது. தற்பொழுது ஈரானின் 20% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பாக 210 கிலோ உள்ளதாக […]
