செர்னோபிலில் உக்ரைன் நாட்டின் ஒரு ராணுவ வீரர், கொடி ஏந்தி கொண்டு நின்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை தொடங்கிய போது, ஆக்கிரமித்த ப்ரிபியாட் பகுதியை உக்ரைன் மீண்டும் கைப்பற்றி விட்டது. இதனை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த வாரத்தின் கடைசியில் ரஷ்ய வீரர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறி விட்டதாக உக்ரைன் தெரிவித்தது. கடும் இழப்பாலும், கதிர்வீச்சு பாதிப்பாலும், படைகள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. ரஷ்யப்படை பின்வாங்கியது, உக்ரைனின் முக்கியமான வெற்றி என்று […]
