பிரான்ஸ் நாடு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட கோபத்தால் ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து தங்களது நாட்டு தூதரை திரும்ப பெற்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவை எதிர்கொள்ள இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கியுள்ளது. அதன்படி அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கிடைக்கவும், படைபலத்தை அதிகரிக்கவும் உதவுவோம் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா நாடு பிரான்சிடமிருந்து நீர்மூழ்கி […]
