மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவையில் செல்லூர் ராஜு பேசியதால் அனைவரும் சிரித்தனர். சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது செல்லூர் ராஜூ மின்வெட்டு வராமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். மேலும் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக பேசினார். இதற்கு பதில் அளிக்க எழுந்த செந்தில் பாலாஜியை முதல்வர் […]
