அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு பார்டர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலராம் இவர் மனைவி நிம்புபாய். இவர்கள் உட்பட 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு சென்று வழிபடுவதற்காகவும், தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காகவும் ஊரடங்கு நடைமுறைக்கு முன்பு இந்தியா வந்தனர். புனித தலங்களுக்கு சென்று விட்டு பாகிஸ்தானில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து திரும்பினர். […]
