அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண் ஒருவர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் வசிப்பவர் பாபுலால். இவருடைய மகள் துர்க்காதேவி. இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. துர்காதேவி அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா தேவி வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பைக்கில் தன்னுடைய தந்தையுடன் சென்று இருக்கிறார். அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது அதிவேகமாக […]
