ஈரோட்டில் நடந்த விபத்தில் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வா.உ.சி தெருவில் கார் டிரைவரான ராஜேந்திரன்(53) என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ஈரோடு கச்சேரி தெருவில் கார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது கார் தாலுகா அலுவலகத்தை கடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காரை இயக்கியபடியே ஸ்டியரிங்கை பிடித்த நிலையில் மயங்கியுள்ளார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி ஓடி ஈரோடு […]
