நாமக்கல்-திருச்சி சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள என். புதுபட்டியில் உள்ள நாமக்கல்-திருச்சி சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அந்த பேக்கரியில் டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் திருச்சியை நோக்கி சென்று செங்கல் பாரம் ஏற்றி சென்றுகொண்டிருந்த […]
