புதுப்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் ஞாயிறு ஊராட்சிக்குட்பட்டது புதுப்பாக்கம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர பலமுறை கூறியும் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுப்பாக்கம் கிராம மக்கள் சென்ற 4 மாதங்களாகவே ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கவில்லை, […]
