ரயில் பயணத்தின்போது அடிப்படை தேவைகள் இல்லாததால் பயணிகளுக்கு இழப்பீடாக ரூபாய் 20 ஆயிரம் வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் சாத்தமங்கலத்தைச் சேர்ந்த குருவாசலில் சசிதரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொச்சுவேலி விரைவு ரயிலின் ஏ.சி பெட்டியில் ராஜஸ்தானின் பிகானேரிலிருந்து கோழிக்கோடு நோக்கி பயணம் மேற்கொண்ட குடும்பத்தினர் 2013 ஆம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினர். அதாவது, கழிவறைக்குள் செல்ல முடியாத அளவுக்கு கழிவுகள் நிரம்பி […]
