விழுப்புரம் மாவட்ட திண்டிவனம் அருகில் உள்ள கன்னிகாபுரத்தில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. தற்போது நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் ஒரே ஒரு வகுப்பறை மட்டும் தான் உள்ளது என்பதால் 54 மாணவிகள் கல்வி கற்கும் நிலை உள்ளது. இதனால் 1 முதல் 3 ஆம் […]
