சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி என்பவர் தன் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு ரயிலில் வந்த பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் முன்ஜாமீன் கோரி மாணவன் தாக்கல்செய்த மனுவை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். இந்நிலையில் மாணவனின் தந்தையை நேரில் வர வழைத்து நீதிபதி விசாரணை மேற்கொண்டார். மாணவர் குட்டியின் தந்தை சிறிய உணவகத்தில் காசாளராகப் பணிபுரிந்து, கஷ்டத்துடன் மகனை படிக்க […]
