தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் சக்திவேல்(70). இவர் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபரை வாடகைக்கு குடிவைத்துள்ளார். அந்த நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்ப கஷ்டத்தை கூறி, சக்திவேலிடம் ரூ.25 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அந்த தொகையை சக்திவேல் பலமுறை கேட்டும் திரும்ப கொடுக்கவில்லை. கடந்த 10ம் தேதி அந்த வாலிபர் சக்திவேலிடம் தனக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிலர் பணம் தர வேண்டியுள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து […]
