மியான்மரில் போராட்டக்காரர்களுக்கு ராணுவம் விதித்துள்ள அடக்குமுறையால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் யாங்கூன், நேபிடாவ், மாண்டலே ஆகிய நகரங்களில் ராணுவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மியான்மரில் முதலில் பேஸ்புக்கை ராணுவம் தடை செய்தது. இப்போது ட்விட்டர் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. மேலும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. ஆகையால் ராணுவத்திற்கு எதிராகவும், ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும், ஜனநாயகத்தை மீட்கவும் மக்கள் போராடி வருகின்றனர். அப்படி போராடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும், […]
