உக்ரைனில் உள்ள புச்சா நகரில் போரில் பலியான பொதுமக்களின் சடலங்கள் சாலையில் கிடந்தது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் ரஷ்ய படைகள் புச்சா நகரில் பொதுமக்களை கொன்று குவித்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இந்த நிலையில் புச்சா நகரில் போரில் உயிரிழந்த சொந்தங்களை இழந்து வாடும் மக்களின் நிலையை வெளிப்படுத்தும் வகையில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் Nadiya Trubchninova (வயது […]
