திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் அஞ்சு வீடு அருவி இருக்கிறது. இந்த அருவியில் பாதுகாப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக வனத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். இதற்கிடையில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம், பாரதி அண்ணா நகர், கோம்பை ஆகிய இடங்களில் பகல் நேரத்திலேயே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அவை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்துவதோடு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக புகாரின்படி மாவட்ட வனஅலுவலர் டாக்டர் […]
