அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய உதவும் அடிப்படையில் நிதியாண்டு வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக மக்கள் அஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ளனர். இதில் அஞ்சலகங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு பல சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி வைப்புநிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், செல்வமகள் திட்டம் போன்றவை […]
