தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவரான அசோக்செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியாகிய “நித்தம் ஒரு வானம்” படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இவர் கிராமத்து கதையிலும் வில்லனாகவும் நடிக்க விரும்புகிறார். இது தொடர்பாக அசோக்செல்வன் பேட்டி அளித்ததாவது “நான் சினிமா பின்புலம் இன்றி திரைத்துறைக்கு வந்து நிறைய கஷ்டப்பட்டுள்ளேன். திரையுலகிற்கு வரும் அனைவருமே கஷ்டப்பட்டுதான் வருகின்றனர். நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அவ்வாறு தான் […]
