ஆரணியில் அசைவ ஹோட்டலில் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகில் தனியார் அசைவ ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று மதியம் நேத்தம்பாக்கத்தை சேர்ந்த தம்பதியினர் மட்டன் பிரியாணி சாப்பிடுவதற்கு வந்தனர். அவர்கள் மட்டன் பிரியாணி சாப்பிடக் கொண்டிருந்தபோது சாப்பாடில் மட்டன் துண்டுக்கு பதிலாக கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கடை ஊழியர்களிடம் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். […]
