ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். உத்திரபிரதேசம் கித்தோர் சட்டப்பேரவை தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் பேரணியானது நடைபெற்றது. இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டு பேசியதாவது, “இந்தியாவில் 100 கோடி மக்கள் கோவிட் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். ஆனால் நாட்டின் மக்கள் தொகையில் 31 சதவீதம் மக்கள் மட்டுமே கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்தியுள்ளனர்.. […]
